Navarathri – நவராத்திரி – ௧


 நலம் தரும் நவராத்திரி!
மாயையாகிய இருள் தலை விரித்தாடும் போது, ஏற்படும் இன்னல்கள் அதிகம். இறைவன் மட்டும் விதிவிலக்கா என்ன? மனிதனுக்கு மாயையெனும் இருளினால் வரும் துன்பங்கள் எவ்வளவு பேராற்றலுடன் துன்பம் தரவல்லது என்பதனையும், அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது, எப்படி இருக்க வேண்டும் அதற்கான சக்தியினை பெற என்ன செய்ய வேண்டுமென்பதனையும், பெற்ற சக்தியால் நன்மை கிடைக்க நல்லறிவும் அதற்கான ஞானமும், அதனை செயலாற்றும் வீரமும் விவேகமும், பெற்ற வெற்றியினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் நல்லறிவும், அதற்குண்டான பயிற்சியான தியானமும் – மனம் மாறாத குண நலனும் அவசியம் என்பதனை உணர்த்தும் அரியதொரு திருவிழா நவ ராத்திரி திருவிழா! சக்தியின் வல்லமையை உணர்த்தும் திருவிழா! பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனையும், கருணையே கொண்டவளின் ஆக்ரோஷமான வீரத்தினையும், உணர்ச்சிப் பிழம்பான தன்மை கொண்டவர்களுக்கு ஞானம் இருக்காது என்பதனை பொய்ப்பித்து, நல்லறிவான ஞானம் கொண்டு எதனையும் சாதிக்கும் வல்லமை சக்திக்கு உண்டு என்பதனை நிருபித்துக் காட்டும் திருவிழா!
முப்பெரும் அவதாரமாக உருக்கொண்டு சக்தியின் மாண்பின் பெருமையை உணர்த்த வார்த்தைகளும் சொற்களும் இல்லை!
அக்கருணை கொண்ட தாயினை ஒன்பது நாட்களும் வழிபட வேண்டிய முறைகள் கொடுக்கப் பட்டுள்ளது.
தேவை: பனிரெண்டு புதிய அகல் விளக்குகள், போதுமான அளவிற்கு நெய், புதிய திரிகள், அவல், கற்கண்டு, ஒரு புதிய செம்புத் தம்ளர் மற்றும் ஸ்பூன், ஒரு சிறிய செம்புத் தட்டு இவை புதியதாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் ஏழு முப்பது மணியிலிருந்து எட்டு முப்பது மணிக்குள் படையலிட்டு வணங்கவேண்டும். 
1, 3, 5 , 7 ,9 ஆம் நாள் மல்லிகைப் பூவும்,
2, 4, 6, 8, 10 ஆம் நாள் முல்லைப் பூவும் அணிவித்து வழிபட வேண்டும்.
முதல் ஆறு நாட்களுக்கு ஏழு நெய் அகல் தீபங்கள் ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றி வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாட்களுக்கு ஒன்பது தீபங்கள் ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றி வழிபட வேண்டும். பத்தாம் நாள் பத்து தீபம் ஒரு நெய் அகல் தீபம் கொண்டு ஏற்றிடவும். அனைத்து நாட்களிலும் கண நாதனுக்கென தனியாக ஒரு நெய் அகல் தீபம் ஏற்றிட வேண்டும்.
அம்பாள் படத்தின் முன்னால் படையலிட்டு வணங்க வேண்டும்.
மின் தடை பிரச்னை காரணமாக தற்பொழுது பதிவிட இயலவில்லை! விரிவாக பிறிதொரு நாளில் கலசம் செய்யும் முறையினை நீங்களே செய்து வழிபட தேவையான குறிப்பு தருகின்றேன்.
 முதல் நாள்:
பச்சரிசி வெண் பொங்கல் அதன் மேல் மூன்று சிறு வெல்லத்துண்டுகள் வைக்கப்பட வேண்டும். கொட்டையுடன் கூடிய பேரீச்சம்பழம், அவல் கற்கண்டு வைத்திட வேண்டும். வாழைப் பழம் ஆறு, ஒரு செம்புத் தம்ளரில் தண்ணீருடன் ஸ்பூன் வைத்திட வேண்டும்.

இரண்டாம் நாள்: சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் தம்ளரில் ஸ்பூனுடன். வாழைப் பழம் ஆறு. கறுப்புத் திராட்சை வைத்து வழிபட வேண்டும்.

மூன்றாம் நாள்: பயத்தம் பருப்பு பாயாசம் + தண்ணீர் தம்ளரில் ஸ்பூனுடன், ஆப்பிள்- மூன்று, தண்ணீரில் வெல்லம் கலந்த பானகம் ஒரு தம்ளரில் வைத்து வழிபட வேண்டும்.
Advertisements

6 thoughts on “Navarathri – நவராத்திரி – ௧

Comments are closed.