சக்தி வாய்ந்த காரிய சித்தி மந்திரம்….

 காரியங்கள் சித்தி  மந்திரம்!

இம்மந்திரம் மந்த நிலைகள் மாறிடவும் (கிரஹ கோளாறுகளின் காரணமாக ), தீரா நோய்களின் தீவிரம் குறைந்திடவும் ( இறை அனுகிரஹம் இருந்தால் ) செய்திடும் .

மாதாதேவி த்வமஷி பகவாந் வாஸூதேவ பிதாமே
ஜாத ஸோஅ ஹம் ஜநநி யுவயோ
ரேக லஷ்யம் த யா யா!

தந்நோ யுஸ்மத் பரிஜ நதயா தேஸி
கைரப்ய தஸ்த்வம்
கிம்தே பூய  இப்ரய மிதி கில
இஸ்ரே வத்ரா விலாஸி.

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் மௌவ்வும்
பித்மம் அம்லம் பௌம் தீம் தீம் தீம்
பூத்மம் பூத்மம் பூத்மம்!

பஹவான் கிருஷ்ணர்/மஹா விஷ்ணு முன்பாக, ஐந்து விளக்குகள் ஏற்றி , ஐந்து ஊதுவத்திகள் ஏற்றிட வேண்டும். ஒரு செம்புபாத்திரத்தில் தூய நீரும் ஒரு ஸ்பூனும் வைத்திட வேண்டும். ஒரு செம்புத்தட்டில் ஒரு ஸ்பூன் சர்க்கரை வைத்திட வேண்டும். ஒரு செம்புத் தட்டில் அவல், டைமண்ட் கற்கண்டு வைத்திட வேண்டும். வெண்ணெய் ஒரு தட்டில் வைத்திட வேண்டும். துளசி நீரும் ஒரு செம்புப் பாத்திரத்தில் வைத்திட வேண்டும்.

இம்மந்திரம் தேய்பிறை அஷ்டமி ராகுகாலத்தில் மூன்று முறை தூய மனதுடன் பிரார்த்திக்க வேண்டும்.
அஷ்டமி அன்று ஆரம்பித்து தொடர்ந்து இருபத்தேழு நாட்கள் பிரார்த்திக்கவும்.
அஷ்டமி தவிர்த்து மற்ற நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரார்த்திக்கவும்!

குறிப்பு: பொய்யான வாக்குறுதி, பிறர் மனம் புண்பட பேசுதல், கோபம், ஆத்திரப்படுதல், திமிர்த்தனமாக நடந்து கொள்ளுதல், இவைகளை விலக்குதல் வேண்டும். கோபப்படும் சூழ் நிலைகளிலும் அமைதி காத்தல், தன்னிலை விளக்கமளிக்க நேரிடும் போதும் கோபமின்றி பேசுதல் , ஒழுக்கமுடன் நடந்து கொள்ளுதல் அவசியம்!

சிவ பக்தர்கள் – சதுர்த்தி திதியன்று வினாயகர் முன்பாக மேற்குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களும் வைத்து, மேற்கூறிய விதிமுறைகளை கடைபிடித்து, இருபத்தேழு நாட்கள் பிரார்த்திக்கவும்.

Advertisements

One thought on “சக்தி வாய்ந்த காரிய சித்தி மந்திரம்….

Comments are closed.