அல்சூர் – சுயம்பு காளி அம்மன்

பெங்களூர் அல்சூர் பகுதியில் அல்சூர் மார்க்கெட் பின்புறம் காளியம்மன் கோயில் வீதியில் இவ்வாலயம் உள்ளது! 
இங்கு சுயம்புவாய் அம்மன் எழுந்தருளி , அருள்பாலித்து வருகின்றார்.
புற்று எழுந்தருளியுள்ளது. இதனால் அம்மனை புற்று மாரியம்மனாகவும் மக்கள் வழிபடுகின்றனர். குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் தீரவும், சமயத்தில் காப்பவளாகவும், இராகு, கேது தோஷம் இருப்பவர்களுக்கு , அபயம் அளித்து காக்கும் அம்மனாகவும் இருக்கின்றார். இராகு, கேது வினால் வரும் பிணிகள் தீர்க்கும் அபயஸ்தலமாகவும் விளங்குகின்றது.
அல்சூர் காளியம்மன் – புற்று மாரி அம்மனாக – சங்கடங்களை விலக்கி அருளும் , இராகு தோஷங்களை நீக்கும் துர்க்கையாகவும், எதிரிகளின் தொல்லைகள் நீக்கி மன நிம்மதி பெறவும், தீராத தலைவலி தரும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மஹா காளி அம்மனாகவும் மிகுந்த சக்தி கொண்ட அம்மனாக போற்றி மக்களால் வணங்கப்படுகின்றது.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் – இராகு காலத்தில் இரு நெய் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். ( தொடர்ந்தாற்போல ஒன்பது வாரங்கள் செய்தல் வேண்டும்)
அம்மனுக்கு அர்ச்சனை செய்து இரு நெய் தீபங்கள் ஏற்றி மும்முறை வலம் வந்து வணங்க வேண்டும். புற்றிற்கு மஞ்சள் குங்குமம் செலுத்த வேண்டும். 
பிச்சையிடுதல் கூடாது. 
தீராத தலைவலி அம்மனிடம் வேண்டிக்கொண்டு ஒன்பது வாரங்கள் இராகு காலத்தில் எலுமிச்சம்பழத்தில் இரு நெய் தீபங்கள் ஏற்றிவர, தலைவலி நாளுக்கு நாள் குறைந்து, தலைவலி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். மீண்டும் வராது. மனதினைக் கலங்கடிக்கும் பிரச்னைகளும், வந்ததும் தெரியாது என்பது போல, மனதிற்குத் துன்பம் நிகழாத வண்ணம் அம்மன் அருளால் தீர்வதனை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
வாரந்தோறும் இடைவிடாது ஒரு வருட காலம் முழுமனதுடன், உண்மையான பக்தி கொண்டு தஞ்சமென அம்மனிடம் சரணாகதி அடைபவர்கள் வாழ்வு எல்லாவகையிலும் மேன்மை பெறுவதனையும் உணரலாம். 

ஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;

ஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;
ஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;
ஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;
ஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;


ஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;
ஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;
ஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;
ஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;
ஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;
ஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;
ஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;
ஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;
ஓம் காளி ! ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!


ஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி 

துர்க்கா தேவி சரணம்!
ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்
சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்
இந்திரா தேவி மோஹினி சரணம்
மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை
கமலாதேவி சரணம் சரணம்
பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்
புவனேசுவரியே மாலினி தேவி சரணம்
மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்
மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்
மஹாபைரவ மோஹினி தேவி சரணம்
ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்
பங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்!!


ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம்   ஓம்   ஓம்!!
Advertisements