பஞ்சபூத மந்திரங்கள் வரிசை – மண் பூத மந்திரம்


ண்ணினுள் மண்ணாய் மண்நடு
                           மண்ணாய் உள்ளவரே வந்தருள்க!

மண்ணிலை சுத்தமாய் பொற்பதி
                          அளவி உள்ளவரே வந்தருள்க!

மண்ணினித் தின்மையை வகுத்ததிற்
                          கிடக்கையை அமைத்தவரே வந்தருள்க!

மண்ணினிற் நாற்றம் வகுத்ததிற்
                           பல்வகையை படைத்தவரே வந்தருள்க!

மண்ணினிற் பற்பல வகைக்கு
                           நிலைகளை வகுத்தவரே வந்தருள்க!

மண்ணினில் ஐந்தியல் வகுத்ததிற்
                           பலவும் படைத்தவரே வந்தருள்க!

மண்ணிய சக்திகள் மண்செயற்
                           சக்திகளை அமைத்தவரே வந்தருள்க!

மண்ணிலைச் சத்தர்கள் வகைபல
                           பலவும் அமைத்தவரே வந்தருள்க!

மண்கரு உயிர்தொகை வகைவிரி
                           பலவும் அமைத்தவரே வந்தருள்க!

மண்ணிடை பக்குவம் வகுத்ததிற்
                            பிறவும் படைத்தவரே வந்தருள்க!

பஞ்சபூதங்களில் ஒரு பூதமான மண் பூதத்திற்கான மந்திரம். மிகவும் தெய்வீக சக்தி பொருந்திய மந்திரம் ….உச்சாடணம் செய்வீர்… பயன் பெறுவீர்!           
   
Advertisements