பஞ்ச பூத மந்திரம் – 2 – நீர் பூத மந்திரம்

 நீர் பூத மந்தரம்: 

நீரினுள் நீராய் நீரிடை
                  நீராய் உள்ளவரே வந்தருள்க!

 நீர் நிலை திரைவளர் நிலை தனை
                 அளவி உள்ளவரே வந்தருள்க!

 நீரினிற் தன்மையும்  நிகழூ
                ரொழுக்கமும் அமைத்தவரே வந்தருள்க!

 நீரின் சுவை நிலை நிரைத்ததிற்
                 பற்பலவும் அமைத்தவரே வந்தருள்க

 நீரிடை நான்கியல் நிலவுவித்ததிற்
                 பலவும் படைத்தவரே வந்தருள்க!

 நீரிடை சத்திகள் திகழ்வகை 
                 பலப்பலவும் அமைத்தவரே வந்தருள்க!

 நீரினிற் சத்தர்கள் நிறைவகை 
                 உறைவகையும் உடையவரே வந்தருள்க!

 நீரிடை உயிர்பல நிகழுறு
                பொருள்பலவும் அமைத்தவரே வந்தருள்க!

 நீரிடை நிலைப்பல நிலைவுறு
                செயல்பலவும் படைத்தவரே வந்தருள்க!

 நீருறு பக்குவம் நிறைவுறு
                பயன் பலவும் அமைத்ததவரே வந்தருள்க!

 நீரியல் பலப்பல நிரைத்ததிற்
                 பிறவும் படைத்தவரே வந்தருள்க!  

சந்திர வழிபாட்டு மந்திரம்:

   ஓம் பத்ம த்வஜாய வித்மஹே;
             ஹேம ரூபாய் தீமஹி;
   தந்நோ ஸோம ப்ரசோதயாத்;

சந்திரன் என்னும் சாத்வீகரே வருக
தட்சிண பூர்வம் அமர்ந்தவரே வருக
குட்டை உருவம் கொண்டவர் வருக
வெண்மை நிறம் உடையவரே வருக;

முருக்கன் சமித்தில் மூண்டெழுந்து வருக
முத்து விமானம் ஏறியே வருக
இரவில் வலிமை படைத்தவர் வருக
திங்கட்கிழமைக்கு அதிபதியே வருக

பெண்பாலாய் அமர்ந்தவா போற்றி போற்றி
 நெல் பச்சரிசிக்கு உடையவா போற்றி
முத்துடன் அல்லியை அணிந்தவா போற்றி
ஈய உலோகத்தில் இருப்பவா போற்றி

இரண்டேகால் நாளிலோர் ராசியை கடப்பவா போற்றி
ரோகிணி அஸ்தம் திருவோணத்திற் கதிபதியே போற்றி
திங்களூரில் கோயில் கொண்டு எழுந்தவா போற்றி
இனிப்புச் சுவையில் எழுந்தவா போற்றி போற்றி!

மனத்திற்கும் மாதாவிற்கும் அதிபதியே போற்றி
சுக்லபட்சத்தில் சுபமளிப் போய் போற்றி
கிருஷ்ணபட்சத்தில் கீழ்மை நீக்குவோய் போற்றி
பாற்சோற்று நைவேத்யத்தில் பரிமளிப்பாய் போற்றி

 நன்றி: சாரம் அடிகள் நா. துரைசாமி
Advertisements