சில குறிப்புகள்

நம்முடைய கல்வியால் எந்த அளவிற்கு நம்முடைய முன்னேற்றம் எந்தெந்த வகையில் கிடைத்திருக்கின்றது என்பதனை ஒவ்வொருவரும் தன்னுடைய ஒய்வு நேரத்தில் சிந்திக்க வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களில் நிறைய பேர்கள் மூர்க்கத் தனத்துடன், சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருப்பார்கள். நாம் சொல்வதனை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். அவர்களிடம் விவேகத்துடன், எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதனை உணர்ந்து செயல் பட வேண்டும். என்னுடைய பொல்லாத நேரம் இவனிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தை பட வேண்டும் என்றிருக்கின்றது என்று புலம்புவரா நீங்கள். அப்படி என்றால் நீங்கள் செய்ய வேண்டியது…

உங்களுக்கு அருகாமையில் உள்ள சித்தர் சமாதி இருக்கும் சித்த பீடம் உள்ள ஆலயம் செல்லுங்கள்.

அங்கு சென்று மனமுருகி விவேகத்துடன் அனைவரிடமும் நடந்து கொள்ளவும், பேசிடவும் அருள் செய்ய வேண்டி தியானியுங்கள்.  அருகில் இருந்தால் தினமும், தொலைவினில் இருந்தால்  வாரம், அல்லது மாதம் ஒருமுறை சென்று வருவதனை நித்திய கடமையாக்கிக் கொள்ளுங்கள்.

ஓரிருமுறை  செல்வதாலேயே மாற்றம் நிகழ்ந்து விடும் என்று நினைக்காதீர்கள்.

குறிப்பு 2 : இராகு திசை ,  இராகு புத்தி  – காலத்தில் ஏழைகளுக்கு வஸ்திரம் ( வெண்ணிற / சாம்பல் நிற ஆடை ) தானமாக அளித்திடல் வேண்டும்.

குறிப்பு 3 : நம்முடைய பிரார்த்தனைக்காக ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்தினால், கோயில் அர்ச்சகர் அவ்வடை மாலையில் இருந்த வடையினை நமக்கு அளித்தாலும், அதனை நாம் உண்ணக் கூடாது. மற்றவர்களுக்கே அளித்திடல் வேண்டும்.

குறிப்பு 4 : திருமணம் ஆகாமல் தள்ளிக் கொண்டே செல்பவர்கள் ( தன்னுடைய ஜாதகத்தில் 2 / எட்டில் செவ்வாய் ) இருப்பவர்கள் உத்திரமேரூர் பெருமாள் கோயிலும் இராமேஸ்வரம் சிவாலயமும் சென்று மனமுருகி வழிபட வேண்டும்.

Advertisements