காராகத்துவங்கள் – பத்தாம் பாவம்

பத்ததின் பலன்வி யாரம்

சீவனம் பகரும் கீர்த்தி

வித்தைஆக் கிளையே வாண்மை

மிகுந்தஆ கமஞா னங்கள்

நித்திரை கர்மம் மானம்

பூஷணம் நிதியோ டெல்லாம்

கோத்தவன் கதிர்மால்  நீலன்

குருவையும் பேணிப் பாரே!

பத்தாம் இடத்தைக் கொண்டு – வர்த்தகம், பிழைப்பு, புகழ், கலை அறிவு, தூக்கம், தொழில், கெளரவம், விருது, பொருட்செல்வம் ஆகியவற்றைப் பற்றி அறியலாம். சூரியன், புதன், குரு, சனி  ஆகியோரின் நிலையையும் ஆராய்ந்து பார்த்து பலன்களை சரியாக தீர்மானிக்க முடியும்.

பத்தாம் இடம் ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம், தசம கேந்திரம் என்றெல்லாம் கூறப்படும்.

முந்திய சொன்ன சேதி

மொழிந்திடப் பத்தைப் பார்க்க

வந்திடும் கர்மக் கோளன்

வரும்பல வீன மாகச்

சிந்தைசஞ் சலவா னாகும்

செய்தொழில் ஆசா ரங்கள்

சொந்தமாய் அவனி டத்தில்

தோற்றிடும் வகையைஸ் சொல்லே!

பத்துக்குடையவன் வலு இழந்து நின்றிருந்தால் அந்த ஜாதகன் நிலையற்ற மனமுடையவாயிருப்பான்.

செய்தொழிலும் ஆசார அனுஷ்டானங்களும் அவனிடத்தில் நிலை பெற்றிருக்க மாட்டாது.

 

Advertisements