கிரகங்களின் பார்வை:

 

கிரகங்களின் பார்வை:\Image
எல்லா கிரஹங்களும், தான் இருக்கும் இடத்திலிருந்து 7-வது வீட்டைப் பார்ப்பார்கள்.

செவ்வாய், தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7, 8 வீடுகளைப் பார்க்கும் தன்மை உண்டு.
(4-ம், 8-ம் விசேஷப் பார்வை)

குரு, தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 வீடுகளைப் பார்ப்பார் .
(5-ம், 9-ம் விசேஷப் பார்வை)

சனி, தான் இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார்.
(3-ம், 10-ம் விசேஷப் பார்வை)

குறிப்பு: ராகு & கேது இவைகளுக்கு பார்வை இல்லை என சிலரும் , உண்டு என சிலரும் கூறுகின்றனர்.
பார்வை உண்டு என்பவர்களின் கருத்துக்களில் கூட முரன்பாடுகள் உள்ளன. 
ராகு & கேது வின் ஆட்சி , உச்ச ,மூலத்திரி கோண வீடுகளிலும் முரன்பாடுகள் உள்ளன.

ராகு, கேது இவைகள் கிரஹங்கள் அல்ல. இவைகள் சாயா கிரஹங்கள். சூரியன், சந்திரன் வானத்தில் சஞ்சாரம் செய்யும் பாதைகள் குறிக்கிடும் இடங்கள் (Nodes). இப்புள்ளிகள் அப்பிரதட்சணமாகச் சுற்றும். வராஹமிஹிரன் தான் எழுதிய பிரஹத் ஜாதகம் என்ற ஆதிகால நூலில் ராகு கேதுகளை கிரஹங்களாகக் குறிப்பிடவில்லை. மற்ற ஏழு கிரஹங்களை வைத்துதான் ஜோதிட பலன்களைக் கூறியுள்ளார் என்றும் அவருக்குப் பிறகு தோன்றிய ஜோதிட மேதைகள்தான் ராகு கேதுகளையும் சேர்த்து ஒன்பது கிரஹங்களாகக் கருதி பலன்களைச் சொல்லியுள்ளார்கள் என்றும் கூறுகின்றனர்.
ராகு கேது எப்பொழுதும் ஒன்றுக்கொன்று சமசப்தமத்தில் அதாவது 180பாகைகளில் இருக்கும். ராகு கேதுகளுக்கு சொந்த வீடும் கிடையாது.

Advertisements