உரைகிறேனாதி சித்தனொரு வனப்பா 

வொருவனுமே வல்லவடா பரமம்ப்ரம்மம் 
கரைக்கிறே நதிளிருந்து கலைசிருதுக் 
காலாகிப் பிரிந்துதிதி பிண்டமாகி 
நிறைக்கின்ற வாணுமது பெண்ணுமாகி 
நிறைவாக பதினாறு கலையும் பூண்டு 
திறைக்கிரே னவலோருத்தி யல்லாலில்லை 
தேவியுட சிருஷ்டிப்பைச் செப்பக்கேளு 
  
கேளப்பா வவளுடைய தியானத்தாலே 
கெடியாகத்தான் பிரிந்த மூலம்பார்த்து  
ஆளப்பா வந்தவொரு மூலத்தாலே  
வழகாக சிருஷ்டித்தா லோருவனைத்தான்  
வாலப்பா வொருவனுந்தான் வஞ்சகத்தால்  
வந்தவழி செல்லுமென்றான் வாலையைத்தான் 
பாரப்பா வொருவனுமே யில்லைஇல்லை 
பரப்பரம்ம மூலத்தார் பிறந்தேன் பாரே  
  

பாரப்பா ப்ப்ரமமென்ற சோதிக்குத்தான் 

பரிவான கலையதுவா இரத்தேட்டாகும்
சேரப்பா நான்பிறந்த கலைகள் தானுஞ் 
சேர்ந்த தடாவன்பத்தி ஒன்றுங்க்கூடி
ஊரப்பா வானுமொரு பெண்ணுமான 
வட்சரமுமது தானு மைம்பதொன்று 
வேரப்பா வொன்றான வட்சரதால் 
விதமெல்லா மறிந்ததடா யானுங்க்காணேன் 

காணப்பா வைம்பத்தி யோன்றுகுத்தான் 
கண்ணாகத் திறந்ததடா வொன்றுதானுந்த்
தோணப்பா வந்ததொரு கண்ணாலே 
துலங்கவே யான்பிறந்த மூலங்கண்டேன்
நாணப்பா கருவிதா னாகாதேன்றும்
நாதமென்ற வோசையது வேணுமென்றும் 
பூணப்பாவதிர் சிறிது கலைபிரிந்து 
பூரண மாயுந்தனையுஞ் சிருஷ்டித்தானே 

சிருஷ்டித்த களியதுதா நேத்தனையோ சொல்லுந் 
திரண்டதொரு விபரமது தெரியசொல்லு
மட்டித்த கலையதுதா னைமூன்றப்பா
வதிகார மோகமதார் சிருஷ்டிசெய்தேன் 
வட்டித்த கலையதுதான் வாலையாகி
வந்ததடா முகமைந்து கையும் பத்தாய்
எட்டித்த வுனக்கெனக்கு மூலமப்பா 
யேகபறஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே

கொள்ளவே வைம்மூன்று கலைக்குத் தானுங் 
குறியான வெளியொளிதா நெனதுதான் சொல்லும்
விள்ளவே வெளிதாநீ யல்லா லில்லை
விளங்கிநின்ற வெளியதுதான் என்னுகுள்ளே
நல்லவே யதையறிவ தேது மைந்தா
நானறியாச் சோதியென்ற கண்ணே வேணும்
வள்ளலே சோதியென்ற கண்ணே சொன்னால்
வகைமோச மெத்தவப்பா சொல்லோனாதே

சொல்லாதே சோதியது இல்லா விட்டாற்
சூட்சமது வறிவதுதா னேது யேது
கல்லான இருலதுதான் வந்துமூடுங் 
கண்பத்து மிருந்ததனா லாவதேது 
நல்லான சோதியது ஞானமாகும் 
ஞானமென்ற கண்போனா லுஇரே இல்லை 
வல்லான கன்னயுந்தான் வாயில் சொன்னால் 
 வகையேது முனக்கில்லை வழங்கினேனே 


——————————————————————————————

தான் என்ற வாதியிலே நந்தி ஆனேன் 
தவம் செய்து சித்தன் அயன் மாலும் ஆனேன் 
வேனென்ற சுப்ரமணிய ரூபமானேன் 
விண்ணவர் சேனாபதி இந்தரனுமானேன்
நான் என்ற கிருஷ்ணா வடிவாகிநின்றே 
நபி ரூபமாய் உலகம் எங்குமானேன்
வானென்ற பராபரமாய் நின்று கொண்டேன் 
மாநிலத்திற் போகரென்று வாழ்ந்திட்டேனே.

வாழ்ந்திட்டேன் எந்தனுட சித்தைக்கண்டு 
வல்ல சித்தர் யாவரும் மலைத்தெழுந்து
தாழ்ந்திட்டார் அருள் வேண்டும் என்று கேட்டார் 
தவம் செய்தால் அருள்வேன் என்று அருளிச்செய்தேன் 
சூழ்ந்திட்டார் யானிருக்கும் பதியிலப்பா 
சொல்லரிய தவம் செய்து இருக்கும் இருக்கும் நாளில் 
வீழ்ந்திட்டு போரார்கள் மனிதறொன்று 
விதி விலகி இருப்பதற்கு செப்பினேனே.

செப்புகிறேன் சித்தரெல்லாம் மறைத்தே வைத்தார் 
செகந்தனிலே சொன்னதெல்லாம் கபடம் மெத்த 
அப்புகிறேன் படமென்ற வினயைத்தள்ளி 
அதி சுருக்காய் ஆச்சரியம் அடையசொல்வேன்
தப்புகிறேன் என்றாலும் தவறோட்டாது
தன்னிலே தூக்குமடா எந்தன் மூலம் 
ஒப்புகிறேன் என்றனுட மூலம் காண 
உயர்ந்ததொரு காயசித்தி செய்குவாயே.