இராவணன் கோபமும் வெட்கமும் கொண்டு அவ்விட்த்தை விட்டு செல்லும் முன்பாக, கோபத்துடன் பிராமண பிரம்மச்சாரியான கணபதியின் தலையில் கொட்டி விட்டுச் சென்றான்.
தலையில் குட்டுப் பட்ட கணபதி – தன் தவறினை ( கீழே வைத்த்தனால் கோபங்கொண்டு குட்டுப்பட்ட்தை ) உணர்ந்தார். தன் தவறினை உணர்ந்து தலையில் குட்டு தானே இட்டுக்கொண்டு, இனி இதுபோன்ற தவறினை செய்யமாட்டேன் என்ற உறுதி கொண்டு, தன் பிரார்த்தனையை தன்னிடம் முறையிடுபவர்களுக்கு மட்டும் உதவ்வேண்டும் என்ற திருவுள்ளம் கொண்டார். இதனாலேயே கணபதியை வணங்கும் முன்பாக் குட்டுஇட்டுக் கொள்ளும் பழக்கம் வரலாயிற்று. மேலும், கணபதியை வணங்கிய பின்னரே 2எதனையும் செய்யும் பழக்கமும், எத்தெய்வத்தையும் வணங்க வேண்டும் என்கிற ஐதிகமும் தோன்றிற்று!
கோகர்ணத்தில் பிராணலிங்கம் ஸ்தாபிதம் செய்யப்பட்டபின், விஷ்ணு தன் சக்தியாகிய சத்துவ குணக்கொம்பை சாலிகிராமத்திலும், பிரம்மன் தன் சக்தி அடங்கிய கொம்பை புஷ்பகரத்திலும் ஸ்தாபிதம் செய்தனர். இம்மூன்று தலங்களையும் தரிசிப்பது விசேஷமாகும்.
பிரம்மனால் படைக்கப்பட்ட நதிரூபங்கொண்ட பெண் ருத்திர்ரை மண்ந்த்தனால், இத்தலத்தின் நதியில் நீராடி, பித்ரு கர்மச் சடங்கினை செய்தலும் சிறப்பு பெறுகிறது. பரம்பரை பரம்பரையாக தோஷங்கள் தொடர்வதாலும் ஒருவன் தன் வாழ்க்கையில் மிகவும் துன்பமடைய நேரிடுகின்றது. இதிலிருந்து விடிவு கிடைக்க, இந்த நதியில் நீராடி, பித்ருக்களுக்கான சடங்கு செய்து, கடலில் நீராடி, கோடி தீர்த்த்த்தில் நீராடி, இத்தலத்து பிராணலிங்கத்தினை தரிசிப்பதால் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்த துன்பங்கள் இறைவனால் நீக்கப்படுகிறது. மேலும் நிழலான பிரம்மஹத்தி போன்ற தோஷங்களும் நீங்கப் பெறுகின்றது. தெளிவான அறிவுடன் செயல்படும் நிலைக்கு ஆளாகின்றான்.
குறிப்பாக ஞாயிறு , திங்கள் , புதன் ஆகிய கிழமைகளில் இங்கு கடலில் நீராடினால் மிகவும் சிறப்பு .
ஈஸ்வரனுக்கு கைலாயமும், விஷ்ணுவுக்கு இந்திர நீலமும் இருப்பிடங்களாக இருப்பது போல, இமயமலைச் சிகரங்களில் ஒன்றான சதசிருக்கம் என்பது பிரம்மனுடைய இருப்பிடமாக இருந்துவந்த்து. கருடன் ஒரு சமயம், தன்னுடைய அலகில் துர்முகன் எனும் சர்ப்பத்தை பற்றிக் கொண்டு வந்து இம்மலைக்குன்றில் எங்காவது அமர்ந்து உண்ண தகுந்த இடம் தேடி பறந்து கொண்டிருந்த்து. எதிர்பாராதவிதமாக சர்ப்பம் நழுவி கீழே விழுந்துவிட்ட்து. மலைப்பள்ளத்தாக்கில் விழுந்த சர்ப்பத்தை கருடன் நெடு நேரம் தேடியும் கிடைக்கவில்லை.இதனால் கோபங்கொண்ட கருடன் இம்மலையில் இருந்த இருகோடி தீர்த்தங்கள், மலையில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள், பிரம்மன் உட்பட மலையையே பெயர்த்து அலகால் எடுத்துக்கொண்டு பறந்த்து. பிரம்மன் இதனை உணர்ந்து, மூவுலக கனத்தினை மேலும் கொடுத்து குன்றை அழுத்தினார். இச்சமயத்தில், கருடன் கோகர்ணம் அருகில் பறந்துகொண்டிருந்த்து.
பாரம் தாங்காத கருடன் தனக்கு ஏற்பட்ட அபாயத்தினை உணர்ந்து, அகத்தியரை மானசீகமாக வேண்டி, இந்த அபாயத்தில் இருந்து தன்னை மீட்க்க் கோரிக்கை விடுத்த்து. எல்லாம் ஈஸ்வரனின் சித்தப்படியே, அனைத்தும் நிகழ்வதை ஞானதிருஷ்டியில் அறிந்து கடலில் மலைக்குன்றை இறக்கியதுடன், கருடனையும் மீட்டார். இரண்டு கோடி தீர்த்தங்களில் ஒருகோடி தீர்த்தங்கள் கடலிலும், ஒரு கோடி தீர்த்தங்கள் இம்மலைக்குன்றிலும் சிதறின. பிறகு அவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு தீர்த்தமாக (கோடித் தீர்த்தமாக ) ஆயின. அகஸ்தியர் தவம் செய்த இட்த்தில் அகஸ்திய தீர்த்தமும் அகஸ்தீஸ்வர லிங்கமும் உள்ளது. இங்குள்ள கருட தீர்த்த்த்தில் நீராடி, காயத்ரி மந்திரத்தினை நான்குலட்சம் முறை ஜெபித்தால் நினைத்தனை சித்திக்கும் வல்லமை பெறுகிறார்.
கோடி தீர்த்த்த்தில் நீராடி, பிரார்த்தனை செய்தால் சகல தோஷங்களும் விலகுகின்றன.

—–தொடரும்—-